தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கால் வேலூரில் குறையத் தொடங்கும் கரோனா பாதிப்புகள் - Vellore district news

வேலூர்: முழு ஊரடங்கு, கரோனா முகாம்கள் மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம்
சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம்

By

Published : Jun 11, 2021, 3:56 PM IST

Updated : Jun 11, 2021, 5:01 PM IST

வேலூர் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்து இன்று (ஜூன்.11) ஒரே நாளில் 90 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு, கரோனா பரிசோதனை முகாம்கள், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே வேலூர் மாவட்டத்தில் அதிக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 லட்சம் மக்கள் தொகையில் ஏழு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களைக் காட்டிலும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

Last Updated : Jun 11, 2021, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details