வேலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்ட தொடக்க விழா, உணவுப் பொருள்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக 05) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ”தமிழ்நாடு முதலமைச்சர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தற்போது 7 லட்சம் பேர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவர்களில் மூன்றரை லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு 44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் தலைமையில் சிறப்புத் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 937 டன் அரிசி, 7 ஆயிரத்து 253 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குத் தேவையான உணவுப் பொருள்கள் மத்திய தொகுப்பிலிருந்து போதுமான அளவு வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய்யைப் பொறுத்தவரை 28 ஆயிரம் கிலோ லிட்டர் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. ஆனால், 7 ஆயிரத்து 500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே கூடுதலாக மண்ணெண்ணெய் வேண்டுமென முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீதும் நடவடிக்கை - அமைச்சர் தகவல்