வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் களம் காண்கின்றனர்.
ஜனநாயகக் கடமையாற்றிய அமைச்சர் நிலோபர் கபீல் - voted
வேலூர்: மக்களவைத் தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தனது வாக்கை பதிவு செய்தார்.
vellore
இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தனது தொகுதியான வாணியம்பாடி நீலிக்கொல்லை மசூதி பள்ளியில் தன் மகளுடன் சென்று வாக்கை பதிவு செய்தார்.