திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நாட்றம்பள்ளி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என ஆயித்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்கவேண்டும்: நிலோபர் கபீல்! - ADMK about Local Body ELection
திருப்பத்தூர்: அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
minister-nilofer-kafeel-meeting-with-admk-cadres
இதில் அமைச்சர் நிலோபர் கபீல் பேசுகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமை வேட்பாளர்களாக யாரை நிறுத்தினாலும் அனைவரும் விறுப்பு வெறுப்பு காட்டாமல் ஒன்றிணைந்து வெற்றிபெற செய்யவேண்டும் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்தை தொடங்கி வைத்து பயணித்த அமைச்சர்!