திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 135ஆவது காங்கிரஸ் நிறுவனர் நாளை முன்னிட்டு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி வணக்கம் செய்து இனிப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாக படிக்கவில்லை எனக் கூறி, அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை அஞ்சல் மூலம் அனுப்பினார்.
இதையடுத்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்திருந்தார்.