வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் நியாய விலைக் கடையும், பெண்களுக்கான நூலகமும் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபிலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
கோரிக்கையை ஏற்று வாணியம்படி பகுதியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையும், நூருல்லா பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலக வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்கான புதிய நூலகமும் கட்டப்பட்டது.
கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு புதிய நியாயவிலை கட்டிடத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினர்.
அதேபோன்று, தற்போதைய தமிழ்நாடு அரசும் பெண்களின் மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பெண்களின் கல்விக்காக நமது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.