வேலூர்: அணைக்கட்டு அருகே முத்துகுமரன் மலை முதல் பீஞ்சமந்தை மலைக்கிராமம் வரை ரூ.5.11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை திறப்பு விழா நேற்று (ஜூலை.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
பீஞ்சமந்தை மலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பீஞ்சமந்தை, பாலாம்பட்டு மற்றும் ஜார்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகளை சார்ந்த 794 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடியே 3 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான அரசின் நல்ல திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "தமிழ்நாடு முழுவதும் வனம் சார்ந்த பகுதியில் வாழும் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
வனத்துறை சார்பாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 1036 பேர் பயனடையும் வகையில் 57 ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை தொட்டிகள் ரூ.6.79 கோடி செலவில், 674 மக்கள் பயனடையும் வகைகள் 6 தெருவிளக்குகள் ரூ.1.20 லட்சம் செலவில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் 204 மக்கள் பயனடையும் வகையில் 3 ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் ரூ.23.40 லட்சம் செலவில் 10,400 மக்கள் பயனடையும் வகையில் 167 சூரிய மின்விளக்குகள் ரூ.50.01 லட்சம் ரூபாய் செலவிலும் இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.