வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் குப்பம், கத்தாரி, தோப்பலகுண்டா, பச்சூர், கொத்தூர், பந்தார பள்ளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகள் மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார்.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் பொதுமக்கள் அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, ’மக்கள் அளித்துள்ள மனுக்களை அலுவலர்களால் விரைந்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது.
பொதுமக்கள் குறைகள் மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றும் வகையில் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மூன்றாக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாகவுள்ளன. மேலும், ஜோலார்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவான அரசு தொழில்நுட்பக் கல்லூரி உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.