தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வேலூர் மாவட்டத்தில் இன்று அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், "இந்த தேர்தல் நமது கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தேர்தலாகும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும், குறிப்பாகத் தேர்வு செய்யப்படும் வேட்பாளர் பொருளாதாரத்தில் உயர்ந்தவராகவும், பகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். பாஜக மீது சிறுபான்மையினருக்கு ஒருவித வெறுப்பு உள்ளது. அதன் காரணமாகத் தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.