தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 3 கோடி மதிபுள்ள சைக்கிள்கள்! - minister k c veeramani give cycle

வேலூர்: விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கே.சி. வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு ரூ. 3 கோடி மதிப்புள்ள 90 ஆயிரம் சைக்கிள்களை வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா  minister k c veeramani give cycle  minister k c veeramani give cycle to school students
விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

By

Published : Jan 25, 2020, 1:07 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருப்பத்தூர் மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு 3 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 90 ஆயிரம் மிதிவண்டிகளை வழங்கினர்.

விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

இதில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

ABOUT THE AUTHOR

...view details