தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தாரைவார்த்ததை அதிமுக மீட்டெடுக்கும் - ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர்: 17 ஆண்டுகள் திமுக தாரைவார்த்ததை அதிமுக நிச்சயமாக மீட்டெடுக்கும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி

By

Published : Jul 26, 2019, 8:17 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேனியிலிருந்து ஓர் இலை டெல்லி சென்றுவிட்டது. வேலூரிலிருந்தும் ஓர் இலை டெல்லி செல்லும். கிளசரீன் இல்லாமலேயே அழக்கூடிய திறன் பெற்றவர் துரைமுருகன்.

ஜெயக்குமார் பேட்டி

தேர்தலில் பணத்தை தண்ணீராக வாரி இரைக்கக்கூடியவர்கள் திமுகவினர். அதனையும் மீறி அதிமுக வெற்றிவாகை சூடும்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது டெல்லியில் திமுக செல்வாக்கு ஓங்கியிருந்ததாக திமுகவினர் கூறிவருகின்றனர். கிட்டத்தட்ட 17 வருடங்கள் திமுக தாரைவார்த்ததை அதிமுக மீட்டெடுக்கும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details