வேலூர்: காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று (டிச.3) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 166 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூபாய் 46 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். அதனை நிறைவேற்றுவது அவர்கள் கையில் தான் உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடக அரசு மேகதாது அதைக்கட்டுவதைத் தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது.
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன் பேட்டி கொஞ்சம் காலம் அவகாசம் தேவைப்படும்
நீர்நிலைகளைக் கணக்கெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இதனை நான் வரவேற்கிறேன். ஒரு வாரகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டுமெனக் கூறியுள்ளனர். கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.
தமிழ்நாட்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்
மேலும், குடியாத்தத்தில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். அதில் முதற்கட்டமாக நூறு தடுப்பணைகளை கட்டுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:துரைமுருகன் வெற்றிக்கு எதிரான வழக்கு, அதிமுக வேட்பாளர் பதிலளிக்க உத்தரவு