வேலூர்:பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ 40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “தமிழ்நாட்டில் நிதி நிலை கடும் நெருக்கடியில் உள்ள கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இப்போது தான் பதவி ஏற்ற பின்னர் அதனை சமாளித்து வருகிறோம். விரைவில் தமிழ்நாட்டை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் வரையில் பணிகள் படிப்படியாக தான் நடக்கும், அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றார்.