தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டுவண்டியில் பயணம்செய்து பொங்கல் கொண்டாடிய அமைச்சர்! - சமத்துவ மக்கள் கட்சி

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபீல் மாட்டுவண்டியில் பயணித்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

Minister Nilofer Kapil
Minister Nilofer Kapil

By

Published : Jan 16, 2020, 10:03 AM IST

பொங்கல் விழா சிறப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இதற்காக அமைக்கப்பட்டிருந்த திடலில் பொதுமக்கள், சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாட்டுவண்டி பயணம்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் நிலோபர் கபீல், மாட்டுவண்டியில் பயணித்து பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினார். பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

இதுதான் முதல்முறை

அப்போது அவர் பேசுகையில், "பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குரியது; இதை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வாழ்நாளிலேயே பொங்கல் பண்டிகையை மாட்டுவண்டியில் பயணித்து கொண்டாடியது இதுவே முதல்முறை" என மனம் நெகிழ்ந்தார்.

மாட்டுவண்டியில் சவாரிசெய்து பொங்கலைக் கொண்டாடிய அமைச்சர்

பரிசும் வாழ்த்தும்

பின்னர் விழா திடலில் குழுமியிருந்த பெண்களுக்கு சேலையைப் பரிசாக வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார். மத பாகுபாடின்றி நடைபெற்ற இந்தச் 'சமத்துவப் பொங்கல்' விழாவில் ஏராளமான மக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச மதிப்பில் பொருள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details