வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவத் துறையின் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 6000 கி.மீ. சைக்கிள் பேரணி - cycle rally in vellore
வேலூர்: ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
military awareness cycle rally in vellore
ராணுவத்துறையைச் சேர்ந்த வீரர்கள், ராணுவத்தில் பணிபுரிந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக எடுத்துரைத்து, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ராணுவத்தில் சேர ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.
ஜனவரி 23ஆம் தேதி ஜெய்சால்மர் என்ற இடத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம், நேற்று முன் தினம் (பிப். 03) வேலூர் வந்தடைந்தது. இந்த சைக்கிள் பயணம் கிருஷ்ணகிரி, பெங்களூர், கொல்லம் ,சேர்தாலா, அலுவா, ஜோத்பூர் மொக்கரான் வழியாக மீண்டும் ஜெய்சால்மருக்கு பிப்ரவரி 17ஆம் தேதி சென்றடைகிறது. இந்த சைக்கிள் பயணமானது சுமார் 6063 கிலோ மீட்டர் செல்லவுள்ளது. இது தென்னிந்திாயவின் ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய பேரணியாகும்.
இதையும் படிங்க: 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து
TAGGED:
cycle rally in vellore