வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் சாந்தன்(எ)சாந்தகுமார்(53) தண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே அண்மையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக்கைதிகளுக்கு பொது மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்ட நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட சாந்தகுமாருக்கு இன்று 3ஆவது நாளாக பல பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.