வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 01.08.2019 அன்று காலை ஆம்பூர் பஜார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது அவ்வழியில் இருந்த தனியார் காலணி தொழிற்சாலைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இஸ்லாமிய நிர்வாகிகளுடன் சந்திப்பில் ஈடுப்பட்டார்.
திருமண மண்டபத்துக்கு போடப்பட்ட சீல் 24 மணி நேரத்துக்கு அகற்றம் - மாவட்ட ஆட்சியர்
வேலூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தனியார் மண்டபத்துக்கு போடப்பட்ட சீல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 24 மணி நேரத்திற்கு அகற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறையை மீறி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டதாக ஸ்டாலின், மண்டப உரிமையாளர், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது 171F, 171C, 188IPC ஆகிய பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அத்திருமண மண்டபத்திற்கு வட்டாச்சியர் சுஜாதா தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனை தொடர்ந்து அம்மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற இருப்பதால் திருமண வீட்டார் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று மாலை 6.45 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு இன்று மாலை 6.45 வரை திருமண ஏற்பாடுகள் நடத்த அனுமதித்தார். அதன்அடிப்படையில் அரசு அதிகாரிகள் மண்டபத்திற்கு போடப்பட்ட சீலை அகற்றி மண்டபத்தை திறந்தனர்.