திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காமராஜபுரம் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றுவந்த விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், துர்க்கர ஹோமம், சாந்தி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து இன்று காலை மகாதேவ மலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர்.
ஸ்ரீ மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா பின்னர், பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும், இவ்விழாவில் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: ஸ்ரீ எல்லை அம்மன் ஆலய குடமுழக்கு விழா