வேலூர் மாவட்டம் அண்ணா சாலையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்துவரும் 8 வயது சிறுமியை, சில நாள்களுக்கு முன்பு உணவு இடைவேளையின்போது ஒருவர் மிக்சர் வாங்கித் தருவதாகச் சொல்லி பள்ளியின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து, அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அதன்பின் அவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் ஆபாசமாகப் பதிலளித்து மிரட்டியதாகத் கூறப்படுகிறது.