தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - Vellore district News

வேலூர்: இரும்பு ராடை மேலே கொண்டு செல்லும் போது மின்கம்பத்தில் உரசி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MAN ELECTROCUTED TO DEATH
MAN ELECTROCUTED TO DEATH

By

Published : Jun 14, 2020, 1:23 AM IST

வேலூர் மாவட்டம் சார்ப்பனமேடு தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (16). இவர் அப்பகுதியில் உள்ள காலணி கடையின் விளம்பரப் பலகையை வைப்பதற்காக 20 அடி நீலம் கொண்ட இரும்பு ராடை மேலே கொண்டு செல்லும் போது அருகில் செல்லும் தெருவிளக்கு மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் ரிஸ்வான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற ஆசிக் என்ற மற்றோரு இளைஞர் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details