வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை செரீப் நகரைச் சேர்ந்தவர் பழ வியாபாரி ஷமியுல்லா. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சுகேல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இதனிடையே நேற்று(ஜூலை 23) மாலை ஷமியுல்லாவ் கடைவீதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சுகேல் அவரது கூட்டாளிகள் ஐந்து பேருடன் வந்து ஷமியுல்லாவை திடீரென கத்தியால் வெட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஷமியுல்லாவுக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அருகிலிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லை: மார்பளவு நீரில் உடலை சுமந்த அவலம்