திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து சரக்கு லாரி ஒன்று சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையின் தடுப்பு வேலிகள் மீது மோதியது. அதில், எதிர் சாலையில் சென்னையிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து, லாரியின் பின் பக்கம் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியும் சரக்கு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவக்கு பலத்த காயமும், ஐந்து பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.