வேலூர்:காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (அக்டோபர் 1) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
அதில் பேசிய கே.பி. முனுசாமி, “'ஆளும் கட்சியான எங்களுக்கு வாக்களித்தால்தான் நல்லது செய்ய முடியும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்தால் பணி செய்யவிட மாட்டோம்' எனத் திமுகவினர் கூறிவருகின்றனர். திமுகவைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து பொய் கூறியே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தற்போதும் அந்த வகையிலேயே வாக்கு கேட்டுவருகிறார்கள்.
வாக்குறுதிக்குப் பதில் சாக்கு சொல்லும் திமுக
100 நாள் வேலை 150 நாள்கள் ஆக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள் 100 நாள் வேலையை 150 நாள் ஆக்குவது குறித்து ஒன்றிய அரசை அனுகுவோம் எனப் பழிபோடுகிறார்கள்.
காட்பாடியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு கூட்டுறவுச் சங்கங்களைக் களைத்துவிட்டு திமுகவினரை நியமிக்க இருக்கிறோம் எனக் கூறினார். இது எப்படிப்பட்ட கொடுமை.