ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு பள்ளி செயல்பட்டு வரும் பகுதி அருகே செருப்பு தைக்கும் கடை ஒன்றை முத்து (62) என்பவர் நடத்தி வருகிறார். முத்து இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவிகளிடம் தனது கடையில் அமர்ந்து கொண்டு மதுபானத்தை க்ளாசில் ஊற்றி மாணவிகளுக்கு சியர்ஸ் என்று கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அவ்வழியாக வந்த பெற்றோர் ஒருவர் ஆத்திரமடைந்து முத்துவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மது அருந்திவிட்டு மாணவிகளிடம் சில்மிஷம் - முதியவர் கைது - மதுபோதை
வேலூர்: மது போதையில் பள்ளி மாணவிகளிடம் சியர்ஸ் கூறி சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
உடனடியாக அருகில் இருந்தவர்கள் வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் இருந்து முத்துவை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் முத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது உண்மை என தெரிந்ததும், வாலாஜாபேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் காரணமாக பள்ளி வளாகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பிரபல ஓவியக் கலைஞர் ஈஷா யோகா மையத்தில் காலமானார்!