தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 6, 2023, 12:38 PM IST

ETV Bharat / state

வேலூரில் 2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு தொடங்கியது

2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வேலூர் கஸ்பா சாலையில் உள்ள மாவட்ட காவலர் கவாத்து மைதானத்தில் இன்று தொடங்கியது

2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வேலூரில் தொடங்கியது
2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வேலூரில் தொடங்கியது

2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு வேலூரில் தொடங்கியது

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் மாவட்ட காவலர் கவாத்து மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 11ஆம் தேதி வரை நடக்க உள்ளது இதில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு இன்று தொடங்கி 8ஆம் தேதி வரையும்,

2ஆம் கட்ட தேர்வு 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையும் நடக்கிறது. இன்று நடைபெற்ற தேர்வில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற் கூறு அளத்தல், ஓட்டப்பந்தயம், உடற்தகுதி தேர்வு ஆகியவை நடந்தது இதற்காக வருபவர்கள் அழைப்புக்கடிதம், ஏதேனும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது ஒரு நாளைக்கு 400 பேருக்கு உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த 2ஆம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வுக்கான பணிகளில் டிஐஜிமுத்துசாமி தலைமையில் எஸ்பி ராஜேஷ்கண்ணன் மேற்பார்வையில் 120 போலீசார் ஈடுபாட்டனர். இந்த காவலர்கள் தேர்வு முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது,

இதையும் படிங்க: வேலூரில் கள ஆய்வு.. பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details