திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய அளவிலான 65ஆவது வளையபந்து விளையாட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியினை அமைச்சர் கே.சி. வீரமணி, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, குஜராத், பாண்டிசேரி, ஒடிசா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களிலிருந்து 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். இன்று தொடங்கிய விளையாட்டுப் போட்டியானது தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.