வேலூர் மாவட்டம் விருதம்பட்டு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா (28). திருமணமான இவர் காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் ஷாப்பிங் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார்.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் - காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா - ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுவதாக பெண் புகார்
வேலூர்: காட்பாடியில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருபவரை கைது செய்யக்கோரி விருதம்பட்டு காவல் நிலையத்தின் முன் அமர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
threaten with sexual video
அந்த ஷாப்பிங் சென்டரின் உரிமையாளர் ரால்ஸ்டன் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இன்று (அக்.31) அவரை கைது செய்ய கோரி விருதம்பட்டு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து புனிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.