வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அழிஞ்சி குளம் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் சென்றுள்ளார். அங்கு பயிலும் குழந்தைகளுக்கு உணவு சமைக்க கூடிய ஊழியர்களுக்கு சோப்பு, டவல், தலை மற்றும் ஊடல் கவச துணி போன்ற சுகாதார கிட்டை வழங்கினார்.
மாணவர்களுக்கு பாடம் எடுத்த அமைச்சர் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல்
வேலூர்: வாணியம்பாடி அருகே தமிழ்நாடு அரசு சார்பில் சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுகாதார கிட் வழங்க சென்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், பள்ளி மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடம் நடத்தினார்.
minister
அங்கிருந்த பள்ளி வகுப்பறைக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி அவர்களிடம் கேள்விகள் கேட்டு சிறிது நேரம் பாடம் நடத்தினார். பின்னர் மகளிர் குழுக்கள் மையத்தை குத்து விளக்கேற்றி அமைச்சர் நீலோபர் திறந்து வைத்தார்.