வேலூர் மாவட்டம் விருதம்பட்டைச் சேர்ந்தவர் சுகன்யா (29). இவர் இன்று (ஜன. 28) காலை காட்பாடியிலிருந்து பிருந்தாவனம் பயணிகள் சிறப்பு விரைவு ரயிலில் பெங்களூரு செல்லும்போது, ஒரு பையை காட்பாடி ரயில் நிலையத்தில் தவறவிட்டுள்ளார்.
அப்போது அவ்வழியே சென்ற பெண் காவலர் சரளா என்பவர் அந்தப் பையைக் கண்டெடுத்துள்ளார். அச்சமயம் அந்தப் பையிலிருந்த செல்போன் மணி ஒலித்துள்ளது. அதில் பேசிய சுகன்யா, பை, தன்னுடையதுதான் என்றும், நான்தான் தவறவிட்டேன் எனவும் சரளாவிடம் தெரிவித்துள்ளார்.