தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர்: பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்! - vellore district news

வேலூர்: கணியம்பாடி பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைத்த மின்வேலியில் இளைஞர் ஒருவர் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டச் செய்திகள்  மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி  பன்றிக்கு வைத்த மின்வேலி  Kaniyambadi youth electric shock death  farming land electric shock death  vellore district news  vellore kaniyambadi death
பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்

By

Published : Aug 1, 2020, 7:59 PM IST

கணியம்பாடி அடுத்த காசிமா நகர் மொத்தாக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், குத்தகைக்கு எடுத்த நிலத்தில் தற்போது நிலக்கடலையைப் பயிரிட்டுள்ளார். மலையடிவாரத்தில் அமைந்துள்ள இவருடைய நிலத்தில் காட்டுப்பன்றிகள் நுழைந்து நிலக்கடலையை அவ்வப்போது நாசப்படுத்திவந்துள்ளது.

இதைத்தடுக்க அவர், சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். நேற்றிரவு(ஜூலை 31) அந்தப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்(38), அவ்வழியே சென்றபோது மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று ( ஆகஸ்ட் 1) அவ்வழியே சென்ற ராஜேந்திரன், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்காமல் அருகிலிருந்த ஓடைக் கால்வாயில் ராஜசேகரனின் சடலத்தை வீசியுள்ளார்.

பின்னர், இதுகுறித்து அறிந்து சம்பவ இடம் விரைந்த வேலூர் தாலுகா காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது அண்ணன் அண்ணாமலை என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

ABOUT THE AUTHOR

...view details