வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராகச் செயல்பட்டுவந்த மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பானுவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
கே.வி. குப்பம் தொகுதி தேர்தல் அலுவலராக காமராஜ் நியமனம் - வேலூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் காமராஜ்
வேலூர்: கே.வி. குப்பம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாற்று அலுவலராக மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கே. வி. குப்பம்
இந்நிலையில் வருகின்ற மே இரண்டாம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட முடியாது என்பதால் கே.வி. குப்பம் (தனி) தொகுதிக்கு வேறு தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கக் கோரி வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 27ஆம் தேதியன்று அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் அந்தத் தொகுதிக்கான மாற்றுத் தேர்தல் நடத்தும் அலுவலராக வேலூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.