வேலூர் மாவட்டத்தில் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக பெண்களிடம் நகைப் பறிப்பு, செல்போன், இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத் தடுக்க காவல் துறை பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் குறையவில்லை.
சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்படாமல் இருப்பது, குற்றவாளிகளுக்கு பெரும் சாதகமாக இருந்துவருகிறது. அதனால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு பெரும் சவாலாக இருந்துவருகிறது. இந்நிலையில், வேலூர், காட்பாடி பிசிகே நகர் குடியிருப்புகளில் குற்றச்சம்பவங்களைக் குறைப்பதற்காகவும், தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.
சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கிவைத்த ஆட்சியர் அப்பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் மொத்தம் 27 கேமராக்கள், வீடுகளின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டு சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிசிடிவி கேமரா பயன்பாட்டை தொடங்கிவைத்தனர்.
இதேபோல் அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் அரசை நம்பாமல் தாமாக முன்வந்து சிசிடிவி கேமராக்கள் அமைக்கும்பட்சத்தில் குற்றங்களைப் பெருமளவு தடுப்பதுடன் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.
சிசிடிவி கேமரா பயன்பாடு தொடக்க விழா இதையும் படிங்க: கத்திமுனையில் நகை கொள்ளை - பிடிபட்ட நால்வர் சிறையிலடைப்பு!