வேலூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 16ஆம் தேதி திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கே.சி.வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களில் சுமார் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 34 லட்சம் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.