தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்கிறதா வேலூர் மாநகராட்சி? - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

வேலூர்: மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்கிறதா? என்பது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்கிறதா வேலூர் மாநகராட்சி?
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்கிறதா வேலூர் மாநகராட்சி?

By

Published : Dec 22, 2020, 8:47 PM IST

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி, பாலாற்று படுகை, கருகம்பத்தூர் நீர்த்தேக்கம், பொன்னை ஆற்றின் நீர்த்தேக்கம் ஆகியவை விளங்குகின்றன. பாலாற்றை பொறுத்தவரை ஆண்டுதோறும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும். நிவர் புயல் காரணமாக, பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டத்திற்கு 60 எம்எல்டி குடிநீர் வடிகால் வாரியம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை மூலம் விநியோகிக்கப்படுகிறது. சத்துவாச்சாரி, ரங்காபுரம், காட்பாடி, தாராபடவேடு போன்ற பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்கிறதா? என கேள்வி எழுந்துள்ளது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பேட்டி

இதுகுறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் கூறியதாவது, "வேலூரில் அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால், மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது" என்றார்.

"கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அப்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துகிறோம். இப்படி இருக்கும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும்" என பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிவேதன் குமார் என்பவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசியதாவது, "வேலூரில் குடிநீர் பிரச்னை வழக்கமான ஒன்று. குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. மழை நீரை சேமிக்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநகராட்சி அலுவலர்கள் நல்ல முறையில் பராமரித்து பொதுமக்களுக்கு ஆரோக்கியமான குடிநீரை வழங்க வேண்டும். அதுவே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க: பாதாளச் சாக்கடை கழிவுநீர் பிரச்சினை: எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details