தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

23 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் - வேலூர் சரக டிஜஜி உத்தரவு! - inspectors

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், எங்கு  பணிபுரிந்தார்களோ தற்போது மீண்டும் அந்த இடத்திற்கே  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

வேலூர் சரக டிஜஜி உத்தரவு

By

Published : Jun 22, 2019, 7:06 AM IST

வேலூர் சரக டிஐஜியாக இருந்து வரும் வனிதா, 23 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையத்திற்கும், வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகுராணி வேலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் பத்மாவதி திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கும் என 23 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், தற்போது மாற்றம் செய்யப்பட்ட இடத்திலேயே ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகத் தேர்தல் நேரங்களில் காவல் ஆய்வாளர்கள் மாற்றப்படுவார்கள் பின்னர் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே பணியமர்த்தப்படுவார்கள் அந்த வகையில் தற்போது வேலூர் மற்றும் திருவண்ணாமலை சரகத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details