கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆந்திர எல்லையான குடியாத்தம், பேர்ணாம்பட்டில் நடைபெற்று வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரவேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.