இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கொண்டாடப்படுகிறது. சிப்பாய் புரட்சி மூலம் இந்திய விடுதலை போராட்டத்திற்கும், சுதந்திரத்திற்கும் வித்திட்ட வேலூர் கோட்டையில் உள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் வேலூர் நேதாஜி காவலர் பயிற்சி மையத்தில் உள்ள கொடி கம்பத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். குறைந்த காவலர்களைக் கொண்டு நடைபெற்ற காவலர் அணிவகுப்பை திறந்த வெளி ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டார். வழக்கமாக, 120 காவலர்களுடன் நடைபெறும் காவலர் அணி வைகுப்பு கரோனா வைரஸ் காரணமாக, 48 பேருடன் மட்டுமே நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் கொடியேற்றம்! - வேலூர் மாவட்ட செய்திகள்
சிப்பாய் புரட்சி மூலம் இந்திய விடுதலை போராட்டத்திற்கும், சுதந்திரத்திற்கும் வித்திட்ட வேலூர் கோட்டையில் உள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
independence_day_celebration in Vellore
அதைத்தொடர்ந்து, கரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊரக பணியாளர்கள், அவசர ஊர்தி பணியாளர்கள் என, 36 பேரை ஆட்சியர் கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அதன்பின்னர், தாட்கோ மூலம் இரண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க:'அதிமுக மீதுள்ள ஆசையால் கரோனா பயம் தோற்றுப்போனது'