வேலூர்: காஞ்சிபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபல பச்சையப்பாஸ் துணிக்கடைகள் உள்ளன. இங்கு வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் இன்று (அக்.5) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் உள்ள பச்சையப்பாஸ் துணி கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.