தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Income Tax Raid: வேலூரில் அம்பாலால் குழுமத்தில் வருமான வரித்துறை ரெய்டு! - வேலூர் ஆட்சியர் அலுவலகம்

Income Tax Raid: வேலூரில் உள்ள பிரபல அம்பாலால் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 14, 2023, 3:36 PM IST

Income Tax Raid: வேலூரில் அம்பாலால் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை

Income Tax Raid: வேலூர்:வேலூரில் உள்ள அம்பா லால் குழுமத்தில் இன்று (பிப்.14) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வேலூர் மாநகருக்குட்பட்ட தியாகராஜபுரம் பகுதியில் உள்ள பூபாலம் ராஜசேகரன் என்பவருக்குச் சொந்தமான இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது.

அதேபோல குடியாத்தம் பகுதியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அம்பா லால் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூரில் உள்ள அம்பா லால் கிரீன் சிட்டி இடத்திலும், அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோகப் பொருட்கள், வில்லாஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் குடியாத்தம் நகைக்கடை பஜார், சந்தைபேட்டை பகுதிகளில் உள்ள அம்பா லால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகியப் பகுதிகளிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையிலும், வேலூர் ஓல்ட் பைபாஸ் சாலையில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான விஐபி சிட்டி அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களின் முக்கியமான நபர் ஜவரிலால் ஜெயின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை மற்றும் டெல்லியைச் சேர்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை குழுவினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு செய்ததாக நடைபெற்று வரும் இச்சோதனையில் அம்பாலால் குழுமத்தில் உள்ள ரியல் எஸ்டேட் குறித்த ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் இதர தொழில்கள் குறித்த ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: BBC IT Raid: டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details