தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ. 52 ஆயிரம் பறிமுதல் - vellore district news

வேலூர்: திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 52 ஆயிரத்து 200 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

By

Published : Oct 30, 2020, 1:53 PM IST

வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றிவரும் வெங்கடேசன், எழுத்தராக பணியாற்றிவரும் துரை ஆகியோர் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் இன்று (அக். 29) மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கணக்கில் வராத 52 ஆயிரத்து 200 ரூபாய் பணம் மற்றும் போலி ரசீது ஆகியவை கைப்பற்றப்பட்டது. தற்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கும்போது பிடிப்பட்ட காவலர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details