வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவர் மனைவி உமா கெஜல் நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் துப்புரவு பணி செய்துவருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது உறவினரான கோவிந்தராஜ் மகன் மாதேஷ் என்பவர் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.
உமாவிற்கும், மாதேஷிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. அதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை அவ்வபோது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பணம் தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ் உமாவை கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் உமா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.
இதனிடையே கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடிவந்த காவல்துறையினர், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பிச்செல்ல இருந்த மாதேஷை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.