வேலூர் சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அவரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொழியை கற்றுக்கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது - துரைமுருகன் - imposing hindi language issue
வேலூர்: ஆயிரம் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம், ஆனால் கற்றுக் கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், தனது மகனும் வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தை மாலை அணிவிக்க வைத்தார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள், அவரிடம் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென மத்திய அரசு முயற்சிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "இதை எப்போதும் மத்திய அரசு சொல்லிக் கொண்டுதான் இருக்கும். இந்தி உள்பட அனைத்து மொழியையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியை கற்றுக் கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? மொழியை கற்றுக் கொள்வது தவறில்லை; ஆனால் திணிக்கக் கூடாது" எனக் கூறினார்.