வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் உத்தரவின்படி வேலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமாவதி தலைமையிலான தனிப்படையினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு சோதனை நடத்தினர்.
மதுவிலக்கு பிரிவு காவலர்கள் நடத்திய சோதனை -184 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
வேலூர்: மதுவிலக்கு பிரிவு காவலர்கள் நடத்திய சோதனையில் சிக்கிய 184 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், கோபி, அணைக்கட்டு பகுதி கோட்டை கிராமத்தை சேர்ந்த சென்றாயன் ஆகியோரிடமிருந்து 184 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின் இவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்திற்கு உள்பட்ட சாத்கர் மலையடிவாரம், கொட்ட சேரி கிராமம், தோபி பாறை ஆகிய இடங்களில் மதுவிலக்கு சோதனை நடத்தியதில் 500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது. பின்பு சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்கள், ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.