வேலூர்: லத்தேரி பகுதியில் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் வைத்து தரமற்ற எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சந்திரசேகரன் நம்மிடையே பேசுகையில், "டீசல் என்ற பெயரில் தரமற்ற ரசாயன பொருளை தனியார் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்துவருகின்றன.
இதனால், மாநில அரசாங்கத்திற்கான வருவாயில் ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் வரையிலும், மத்திய அரசிற்கு 35 ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற பெட்ரோலியப் பொருள்களை எக்ஸ்ப்லோசிவ் லைசன்ஸ் பெறாத இடங்களில் இறக்குவது சட்டவிரோதமானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய அபாயம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.