தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் - வேலூரில் பயங்கரம்

வேலூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னை காரணமாக பேருந்து நிலையம் அருகில் வைத்து மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூரில் பயங்கரம்
நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்திய கணவர் - வேலூரில் பயங்கரம்!

By

Published : Jan 24, 2023, 8:39 AM IST

வேலூர்: குடியாத்தம் அடுத்த அழிஞ்சிகுப்பத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று (ஜன.23) மாலை புனிதா பணி முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அழிஞ்சிகுப்பம் பேருந்து நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஜெயசங்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். படுகாயமடைந்த புனிதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி காவல் துறையினர், ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெய்சங்கர், தனது மனைவி புனிதாவை கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:காதலுக்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாக்., இளம்பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details