தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் திருவள்ளூவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை ஆகியவை அணிவித்து பூஜை செய்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கும்பகோணத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.
’அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்ய வேண்டும்’ - இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் - arjun sampath arrest
வேலூர்: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை விடுவிக்கக் கோரி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindu makkal party demonstration for arjun sampath arrest
இதனைக் கண்டித்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் இந்து மக்கள் கட்சியினர் அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!