வேலூர்:41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள்படி வழங்க வேண்டும், 5000-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலி இடங்களை நிரப்பி வேலையில்லா இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று (டிசம்பர் 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - vellore district news
12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நேற்று (டிசம்பர்29) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்