தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன சோதனையில் 1 டன் குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 1 டன் எடை கொண்ட ரூ. 15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனையில் 1 டன் எடை கொண்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல்
வாகன சோதனையில் 1 டன் எடை கொண்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல்

By

Published : Oct 22, 2022, 9:16 AM IST

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை வழியே சென்னைக்கு லாரி மூலம் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் இரவு முழுவதும் பள்ளிகொண்ட சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருல் இருந்து எஸ்.ஆர்.எஸ் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரியை சோதனை செய்த போது அட்டைப்பெட்டிகளிலும், மூட்டைகளிலும் பார்சலுடன் பார்சலாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, வாகனத்துடன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(50), என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா சுமார் 1 எடை கொண்டது என்றும் அதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பதிவு திருமணம் ரத்து - பெண்ணின் மிரட்டல் புகாரால் நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details