காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (60), இவரது பேரன் அஜித் (20). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்ச் 30) காலை சாந்தி கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், சாந்தியுடன் வசித்து வந்த அவரது பேரன் அஜித் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. அஜித்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மதுவிற்காக பணம் கேட்டு சாந்தியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.