தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்பாடி அருகே அரசு சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்! - தையல் எந்திரம்

வேலூர் : காட்பாடி அருகே அரசு சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. இதில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

அரசு சார்பில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம்

By

Published : Sep 26, 2019, 9:22 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியில் காட்பாடி தொகுதிக்குள்பட்ட தண்டல கிருஷ்ணாபுரம், வஞ்சூர் வருவாய் கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் வேளாண் துறை, தோட்டக்கலை, சுகாதாரத் துறை என பல்வேறு துறை சார்பாக அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அரசு சார்பில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம்

இந்த முகாமில் இலவச கண் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பொதுமக்கள் பலரும் திரளாகப் பங்கேற்றனர். இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டைகள், தென்னங்கன்றுகள், மூன்றுசக்கர வாகனம், தையல் இயந்திரம், சலவைப் பெட்டிகள், வேளாண்மை கிடைப்பார்கள் என மொத்தம் ஐந்து லட்சத்து நான்காயிரத்து 650 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கே.வி. குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன், வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : திருட்டுத் தனமாக நடைபெறும் ஆர்எஸ்எஸ் முகாம்: செய்தியாளர்களைத் தாக்க முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details